விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், விதர்பா அணிக்கு எதிராகப் பரோடா வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி தனது முதல் ‘லிஸ்ட் ஏ’ சதத்தைப் பதிவு செய்தார்.
71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரோடா அணி தடுமாறியபோது 7-வது வீரராகக் களமிறங்கிய அவர், 92 பந்துகளில் 133 ரன்கள் விளாசினார். இதில் 11 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். குறிப்பாக, ஆட்டத்தின் 39-வது ஓவரில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பார்த் ரேகாடேவின் பந்துவீச்சில் 5 மெகா சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்களைக் குவித்து மைதானத்தை அதிர வைத்தார்.
6,6,6,6,6,4 BY HARDIK PANDYA TO BRING HIS FIRST HUNDRED IN LIST A CRICKET…!!! 🥶
– The Madman of Indian Cricket. pic.twitter.com/7ib5UFTOMR
— Johns. (@CricCrazyJohns) January 3, 2026
“>
68 பந்துகளில் சதத்தைக் கடந்த இவரது மிரட்டலான இன்னிங்ஸால், பரோடா அணி 50 ஓவர்கள் முடிவில் 293 ரன்களை எட்டியது. 32 வயதாகும் ஹர்திக் பாண்டியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு 50 ஓவர் உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றுத் தனது அபாரமான ஃபார்மை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.
