தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளை மீண்டும் கேட்டு வரும் நிலையில், புதிய கூட்டணிக் கட்சிகளின் வருகையைக் காரணம் காட்டி 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தலைமை கறாராகத் தெரிவித்துவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகளை உயர்த்திக் கொடுத்துவிட்டு, தங்களுக்குக் குறைப்பது நியாயமில்லை என மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளது.
இது தொடர்பாக நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில், திமுக தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப் போட்டியிடலாம் என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்தில் பயணிக்கும் இந்த இரு கட்சிகளும், ஒரு சீட் விவகாரத்தால் கூட்டணியை முறித்துக் கொள்ளுமா அல்லது இறுதி நேரத்தில் சமரசம் ஏற்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
