உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் பயோடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான பிரையன் ஜான்சன் 6 ஆண்டுகளில் உடல் தோற்றத்தின் மூலம் வயதை குறைத்து அசத்தியுள்ளார். அவரது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 46 வயதான அவர் வயதை குறைக்க ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டாலருக்கு மேல் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.