ஹெபடைடிஸ் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த வைரசால் நாளொன்றுக்கு 3500 இறப்புகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நோயால் ஏற்படும் இறப்புகள் 2019ல் 1.1 மில்லியனில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு வங்கதேசம், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளது என WHO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.