ஜார்ஜியாவின் கொலம்பஸை சேர்ந்த ஜான் பெம்பர்டன் என்ற நபர் உள்நாட்டுப் போரில் காயமடைந்த போது தனது காயங்களை குணப்படுத்துவதற்கு அவர் போதை மருந்தான மார்பைனை எடுத்துக் கொண்டார். அதனால் அதற்கு அடிமையானார். மருந்து வடிவில் எடுக்க வேண்டாம் என்று சிந்தித்த அவர் வேறு வழியை யோசித்தார். அவர் சொந்தமாக கோகோ ஒயின் தயாரித்தார். அவற்றில் மது மற்றும் கொக்கைன் கலந்து குடித்து வந்தார். 1886 ஆம் ஆண்டில் அவர் மது கலந்த பதிப்பை உருவாக்க கோகோ கோலாவை உருவாக்கினார். இப்படிதான் கோகோ கோலா என்ற பானம் உருவானதாக கூறப்படுகிறது.