“கடவுள் துகள்” எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான இங்கி., விஞ்ஞானி பீட்டர் வேர் ஹிக்ஸ் (94) உடல்நலக் குறைவால் காலமானார். இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார். மேலும், பல்வேறு ஆய்வு கட்டுரைகள், பரிசுகளைப் பெற்று பல சாதனைகளை படைத்த இவர், இளைய விஞ்ஞானிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கியவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்