
அமெரிக்க தேசிய உளவு பிரிவு தற்போது இந்தியா குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதாவது ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகவும், போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு சட்டவிரோதமாக விநியோகம் செய்யப்படுவதாகவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டு இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் போதை பொருள் பயன்பாடு என்பது கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை பயன்படுத்தும் போது மக்கள் போதைக்கு அடிமையாகி அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் . குறிப்பாக ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக்கொண்ட காரணத்தினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவில் 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனால் போதை பொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக போதை பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களை தயாரிக்கும் இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிக வரி விதிக்க இருப்பதாக கூறியுள்ளார்.