தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் தற்போது 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தீர்மானம்
சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம்.
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தீர்மானம்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம்
சமூக நீதியை நிலை நாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்புகளை ஆய்வு நடத்த வேண்டும்.
மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு மற்றும் அவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம்.
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தேவை இல்லை என்று தீர்மானம்.
இரு மொழி கல்வி கொள்கை தொடர்பாக தீர்மானம்.
கொள்கை தலைவர்களின் வழியில் பயணிக்க வேண்டும் என்று தீர்மானம்
கூட்டணி அமைப்பு மற்றும் கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்.
வேளாண்மை சட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் உரிமையை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
வக்பு வாரிய சட்ட திருந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க தீர்மானம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
பன்னாட்டு அரங்கத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று தீர்மானம்
கட்சிக்காக அயராது பாடுபட்டு மறைந்த செயல் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கழகத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து தீர்மானம்.
