நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எடைக்கு எடை துலாபாரமாக தக்காளியை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனக்காபள்ளியில் உள்ள நூக்கலாம்மன் என்ற கடவுளுக்கு தனது எடைக்கு எடை அதாவது 51 கிலோ எடைக்கு துலாபாரமாக தக்காளியை அந்த பெண் பக்தர் காணிக்கையாக செலுத்தி உள்ளார். ஒரு கிலோ தக்காளி 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வரும் நிலையில் இது மிகவும் காஸ்ட்லியான வேண்டுதல் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.