அமெரிக்கா, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவையும் சேர்த்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதோடு, அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 23 நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சீனா, பாகிஸ்தான், பஹாமஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, எக்குவடோர், எல் சல்வடோர், கவுதமாலா, ஹைத்தி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு, வெனிசுலா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில் ஆப்கானிஸ்தான், பொலிவியா, பர்மா, கொலம்பியா, வெனிசுலா ஆகிய ஐந்து நாடுகள் போதைப்பொருள் தடுப்பில் தோல்வியடைந்ததாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தப் பட்டியல், அந்தந்த நாடுகள் அமெரிக்காவுடன் எவ்வளவு ஒத்துழைக்கின்றன என்பதை பிரதிபலிப்பதல்ல என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
