செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,  தமிழக ஆளுநர்,  கேரளா ஆளுநர்,  ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். வெற்றி தேவதை எங்கள் பக்கம். மகத்தான வெற்றியை அடைவோம்.

DMK கூட்டணியில் 15 சீட்டு நான் சொல்லலையே…  நீங்க ஏன் தப்பா செய்தி சொல்றீங்க….  எங்க தோழர்கள் பேசினார்கள்…. நம்முடைய மனநிலையை நாம் சொல்கிறோம். எங்களுடைய மாவட்ட தலைவர்கள்,  அவர்களுக்கு என்ன வேண்டும் ? என்பதை சொன்னார்கள் அவ்வளவு தான்..

அதன் பிறகு  முடிவு செய்வது காங்கிரஸ் கட்சியினுடைய தலைமையும்,  கூட்டணியில் தமிழகத்தில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையும் அதை  முடிவு செய்யும். ஆசையை  சொல்வதில் தவறல்ல. ஆசை எப்போதும் நிராசையாகாது… திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்னை தொடர்பாக நடவடிக்கை இல்லை…

குறை இருந்தால் நண்பர்களை அழைத்து பேசலாம்.சில பேருக்கு சில குறைகள் இருக்கலாம். அதை பேசி நிவர்த்தி செய்வோம். திருநெல்வேலியில் எப்படி எழுச்சி இருந்ததோ,  அதேபோல எழுச்சி தான்.  நீங்கள் கண்கூடாக பார்த்தீர்கள் அல்லவா?  ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டார்கள். அதே மாதிரி எல்லா இடங்களிலும் பெரும் கூட்டம் வரும் என தெரிவித்தார்.