சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் விஜய்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் விஜயராமின் மனைவி சிந்துதேவி(35), அவரது மகள் அஞ்சலி(9) ராம்(31), கைலாஷ்(21) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கைகாட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.