சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் லியாகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லியாகத் டி.பி சத்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி லியாக்கத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், போலீஸ்காரர் மதியழகன் ஆகியோர் ராஜேஷ் கண்ணாவை தடுக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ்காரர்களை பார்த்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற லியாக்கத்தை போலீஸ்காரர்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போதும் அவர் கத்தியால் வெட்ட முயன்றார். அவரது தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முயன்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சப்-இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரர்களும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷ் கண்ணாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் நீதிமன்றம் ராஜேஷ் கண்ணாவுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 4,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.