கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் காந்தி சிலை பகுதியில் தனது காரை ஓட்டி சென்றார். அவருடன் நாவலன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது மோதியது.

அதன் பிறகும் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டி சென்று மோட்டார் சைக்கிள்கள் மீது பாலசுந்தர் மோதினார். இதனால் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து காரில் இருந்த இரண்டு பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.