லண்டனில் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம், வாரத்திற்கு இரண்டு விடுமுறைகள் மற்றும் சொகுசான வாழ்க்கை இருந்தபோதிலும், அங்குள்ள தனிமையால் ஒரு இளைஞர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். தனது தாய்நாட்டின் உறவுகளையும் உணவுகளையும் மிஸ் செய்வதால், அந்த ஆடம்பர வாழ்க்கையைத் துறந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வர அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் அவருடைய இந்த முடிவைக் கேட்ட நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் மன நிம்மதிதான் முக்கியம் என்று அவரை ஆதரித்தாலும், பலர் “இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பின்மை மற்றும் போக்குவரத்து நெரிசலைப் பார்த்தால், மீண்டும் லண்டனுக்கே போகலாம் என்று நீ அழுது புலம்புவாய்” என எச்சரிக்கின்றனர்.
