தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வுடன் கூட்டணியைத் தொடரப் போவதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மமக, இந்த முறை தனது பலத்தைக் காட்ட 5 தொகுதிகளைக் கேட்டு திமுக-வுக்குப் பெரிய அழுத்தம் கொடுத்துள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த 5 தொகுதிகளிலும் “தனிச் சின்னத்தில்” தான் போட்டியிடுவோம் என மமக பிடிவாதமாகத் தீர்மானம் போட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்ற மமக-வின் இந்தத் திடீர் முடிவு, திமுக தலைமைக்குச் சற்றே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
