1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை லாவண்யா. அதனைத் தொடர்ந்து படையப்பா மற்றும் சங்கமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் 43 வயதில் திருமணம் ஏன் என்பதை தனது திருமண நாளில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்யாமல் இருந்தேன், ஒரு திருமண நிகழ்வில் எனது கணவரை சந்தித்தேன், இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தோம் என்று கூறியுள்ளார்