நடிகர் கமலஹாசனின் மாமா சீனிவாசன்(92) இன்று கொடைக்கானலில் காலமானார். இது தொடர்பாக X தளத்தில் கமலஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். புரட்சிகரமான சிந்தனைகளும், துணிச்சலான செயல்களும் மிக்க மனிதர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மையம் அலுவலகத்திற்கு இன்று இரவு கொண்டு வரப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
