தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.‌

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் ஜெயக்குமார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் தற்போது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசரை பட குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வலைதளத்தில் வைரலாகி வருகிறது.