முன்னணி நடிகை சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்த போது நாகசைத்தன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில்  ‘இட்ஸ் ஃபேஷன் பேபி’ என்ற தலைப்பில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்தப் படங்களில் வெள்ளை நிற மாடல் உடையில் செம ஸ்டைலாக இருக்கும் அவர் அணிந்து இருந்த வாட்ச் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாம்பு போன்ற வடிவில் இருக்கும் Serpenti Spiga பிராண்ட் வாட்சின் விலை ரூ.70 லட்சமாம். சமந்தாவின் அழகும் மட்டுமல்ல விலையும் ரசிகர்களுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.