தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் துரை இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை உள்பட நாற்பதுக்கு மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே, பசி படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றவர். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் வருகின்றனர்.