
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, கோவிலின் உண்டியலில் அவர்கள் போட்டிருக்கக் கூடிய பணம் காலம் காலமாக சேர்த்து வைத்து…. 422 கோடி இந்த ஒரு இடத்தில் மட்டும் பெருந்துட்டு வளாகம் கட்டப் போறோம். ஏன் 30% கமிஷன் அடிக்கவா ? திருவண்ணாமலையில் வைப்பு நிதியிலிருந்து பணம் எடுத்து கோவிலுக்கு வெளியே இதே போல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டணும்….
உங்களுடைய சமயபுரம் கோவிலில் இருந்து மட்டுமே அறநிலைதுறை அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக இன்னோவா கார் ஒன்று 32 லட்ச ரூபாய்க்கு இந்த கோவில் உடைய பணத்தில் இருந்து வாங்கி இருக்கிறார்கள். இந்த பணமெல்லாம் யாருடைய பணம் ? உங்களுடைய பணம்….. கடுமையாக உழைத்து, கோவிலினுடைய உண்டிகளுக்கு, அம்மனுக்காக போட்ட பணம்….
இந்த மாதிரி தமிழகத்திலே ஒவ்வொரு கோவிலிலும், உண்டியலில் திமுககாரங்க கை வைக்கின்றான், அறநிலைத்துறை கை வைக்குது… இந்த பணத்தை எல்லாம் கமிஷன் போடுவதற்காக…. பெருந்திட்ட வளாகம் என்கின்ற பெயரில் ஒரு வளாகம் கட்டப் போறாங்க…. அதனால்தான் நீங்களும் இந்த விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சியோடு உறுதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என தெரிவித்தார்.