கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி ஆதாரப்படி, உ.பி.யைச் சேர்ந்த ஆசிஃப் (48), இர்ஃபான் (45), கல்லூ ஆரிஃப் (60) ஆகிய மூவரைக் குனியமுத்தூரில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் தாக்கியதால், போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில், ஆசிஃப் பலத்தக் காயம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆட்டோ பதிவெண்ணைக் கொண்டு, ஓட்டுநர் அயூப்கான் கைது செய்யப்பட்டார். அவர் பல சமயங்களில் இந்தக் கொள்ளையர்களுக்கு ஆட்டோ ஓட்டி உதவியது தெரியவந்தது.
அயூப்கான் சிறையில் அடைக்கப்பட்டார். உயிரிழந்த கொள்ளையர்களுடன் ஒரே வீட்டில் வசித்த மேலும் 12 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
