திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (14.12.2017) அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே 16 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளார்.

மொபட்டில் வந்த அச்சிறுவன் மூதாட்டியையும் அவரின் பேத்தியையும் தனது வண்டியில் ஏற்றி கொண்டு, பாட்டியை அவரது வீட்டில் விட்டுவிட்டு, சிறுமியை  அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் கொண்டுபோய்  விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் அச்சிறுவன் அந்த  சிறுமியை மலையடிவாரத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அப்போது சிறுமி கூச்சலிட்டதால்  சிறுவன் பலமாக தாக்கியுள்ளார். இதில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு சிறுவன் தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன்பின் சிறுமியை காணாமல் தேடிய போது, மலை அடிவாரத்தில் எரிந்த நிலையில் பிணமாக சிறுமி கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடமதுரை போலீசார்,  அச்சிறுவனை கைது செய்து சேலத்தில் உள்ள சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் இத்தீர்ப்பை ரத்து செய்யக்கோரி,  அச்சிறுவன் மதுரை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களுக்கு உரிய கல்வி உள்ளிட்ட வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறார் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் மனுதாரர் அதற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதாக  வாதாடினார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறியதாவது, அச்சிறுவன் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட பல பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தீர்ப்பை மாற்றியமைத்து, கொலை குற்றப்பிரிவின்கீழ் ஆயுள்தண்டனை அச்சிறுவனுக்கு விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே அவன் அனுபவித்த தண்டனையை  கழித்து மீதமுள்ள காலம் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும்  அச்சிறுவனை முன்கூட்டியே விடுதலை செய்ய எந்தவித  தடையும் இல்லை என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் அறிவித்துள்ளனர்.