திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோணப்பட்டி பகுதியில் பட்டதாரியான சங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மையத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நண்பர் மூலம் மலவார்பட்டி பகுதியை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் விஜயகுமார் என்பவர் சங்கப்பனுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என விஜயகுமார் கூறியுள்ளார்.

இதனை நம்பி சங்கப்பன் 1 லட்ச ரூபாய், அவரது நண்பர்களான சகாய அந்தோணி 3 லட்ச ரூபாய், ஆண்டவர் 7 லட்ச ரூபாய், காவேரி 6 லட்ச ரூபாய் என மொத்தம் 17 லட்ச ரூபாயை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 4 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஜயகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.