ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலையோரமாக பேருந்தை இறக்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து தலைக்கு பிறகவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஓட்டுனர் செல்போன் பேசியபடியே பேருந்து ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக திருப்புல்லாணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.