மீண்டும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து படம் இயக்குவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில தகவல்களை கூறியுள்ளார். 

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்த படம் லியோ. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், படம் குறித்த ஏராளமான தகவல்களை சமீபத்திய நேர்காணங்களில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 

மூன்றாவது முறை விஜய் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு வேலை அவருடன் மூன்றாவது முறையாக நான் இணையும் பட்சத்தில் அதுவும் லியோவை போல் தளபதி அவர்களின் நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் விதமாக மட்டுமே படம் இயக்குவேனே தவிர அவருக்கென இருக்க கூடிய விதிமுறைகளில் கண்டிப்பாக எடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே லியோவின் இரண்டாம் பாகம் வெளியாகலாம் எனவும் அதற்கான படப்பிடிப்பும் பாதி முடிவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் லோகேஷ் கனகராஜ் கூறியது லியோ  வின் இரண்டாவது பாகத்திற்காக இருக்குமோ  என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.