விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான விஜய் தனது துறை சார்ந்த பணிகளில் மிகவும் ஒழுக்கமானவர் என அவருடன் பணிபுரிந்த பலரும் கூறி கேட்டிருப்போம். அதில் ஏராளமானோர் கூறியது நேரத்தை கடைபிடிப்பதில் மிகவும் துல்லியமாகவும் சரியாகவும் நடந்து கொள்வார் என்ன நடந்தாலும் கடமை தவறாமல் நடந்து கொள்வார் என்பது தான். அந்த வகையில், லியோ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் அவர்களின் ஒழுக்கம் குறித்து கூற, 

தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்திய முந்தைய நாள் இரவு 10:30 மணி வரை விஜய் அவர்கள் என்னுடன் இருந்தார். அவர் போகும்போது நாளை நடக்கப்போகும் நிகழ்வு மதியத்திற்குள் முடிந்துவிடும் நான் மதியத்திற்கு பிறகு ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறேன்.  ஒருவேளை தாமதமானால்,  நான் தெரியப்படுத்துகிறேன் என்று கூறினார் .

ஆனால் அன்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது.  அனைவருக்கும் சிரித்த முகத்துடன் நாற்காலி போட்டு கூட அமராமல் நின்றபடியே பரிசுகளை வழங்கி சென்றார்.  நாங்கள் மறுநாள் கண்டிப்பாக ஓய்வு எடுப்பதற்கு விஜய் அவர்கள் விருப்பப்படுவார் என நினைத்தோம். 

ஆனால் காலை 7 மணிக்கு அவரது கார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நின்றது. விஜய்  அவர்கள் அரசியலுக்கு வருவாரா இல்லையா என தெரியாது ? ஒரு வேளை அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால்,  அவரது மனதில் தெளிவான சிந்தனை ஒன்று இருப்பதை காட்டுவதற்கு இந்த கடமை தவறாத ஒழுக்கமே சிறந்த சான்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.