தளபதி விஜய்  தனது மனைவி சங்கீதாவின் ஆசைக்காக நடித்த ஒரு படம் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதாவுக்கு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ரொம்ப பிடிக்குமாம். எனவே அவரது இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். இதனை அடுத்து ஏ.எல். விஜய்யை அழைத்து ஏதாவது கதை இருக்கிறதா? என விஜய் கேட்க அவர் தலைவா கதையை சொல்லியிருக்கிறார்.

அப்படி தான் விஜய் தலைவா படத்தில் நடித்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய், அமலாபால், சந்தானம், சத்தியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் தலைவா. அதற்கு பிறகு அப்படத்தால் பல பிரசசனைகளையும் சந்தித்துள்ளார்.