LCU  ற்குள் யாரை கொண்டு வர விருப்பப்படுகிறீர்கள் ? என கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரசியமான தகவல் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ளார். 

தமிழகத்தின் மிகப் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று கோலிவுட்டின்  ஆகச் சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை லோகேஷ் பெற, அடுத்தபடியாக தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படமும் மாபெரும் வெற்றியை அடைய,  அடுத்ததாக தனது குருநாதர் என பல மேடைகளில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களை பற்றி புகழ்ந்து கூறிய Fan  பாய்க்கு அவரது கனவு நாயகனை இயக்கும் வாய்ப்பு கிடைத்து.

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரம் கோலிவுட்டில் தாறுமாறாக உயர்ந்தது. படத்தின் இறுதியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, லோகேஷ் சினிமேட்டிக்   யுனிவர்ஸ் என தனக்கென ஒரு சினிமா சாம்ராஜ்யத்தை  கோலிவுட்டில் கட்டி எழுப்பியுள்ளார். அவர் இயக்கும் லியோ திரைப்படத்தில் விஜய் அவர்களை திரையில் காண  எந்த அளவிற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறதோ ?அதற்கு இரட்டிப்பாக படம் Lcu விற்குள் இருக்கிறதா ?இல்லையா ?என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

அதற்கு காரணம், எந்த பெரிய நட்சத்திரம் இந்த LCU ற்குள்  இணையப் போகிறார்கள் அவர்களது காம்போ எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான். இன்னிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் எல் சி யு விற்குள் எந்த ஒரு நடிகரை நீங்கள் இணைத்தால் நன்றாக இருப்பதாக விரும்புகிறீர்கள் என்று கேட்க,  நான் இதுவரை அஜித் அவர்களுடன் பணி புரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவருடன் பணிபுரிய மிகவும் ஆசை.LCU ற்குள் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வருவதற்கு அதிகம் விருப்பப்படுகிறேன் என்றால்  அது அஜித் குமார் சார்தான் என தெரிவித்துள்ளார்.  இதை கண்ட ரசிகர்கள் ஒரு வேளை  தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோர் இணைந்து LCU விற்குள் ஒரு படம் நடித்து அது வெளியே வந்தால் கோலிவுட்டில் அது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பூரிப்புடன் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.