நடிகர் விஜய்  விக்ரம் படத்தை பார்த்துவிட்டு அவர் கூறிய  வார்த்தைகள் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபபத்திய நேர்காணலில் தெரிவிதித்துள்ளார்.

அக்டோபர் 19-ல் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படத்தை தயாரிக்கும் நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பங்கு பெரிதளவு இல்லாவிட்டாலும்,  படத்தை விநியோகிக்கும் விநியோகிஸ்தர்கள் தரப்பிலிருந்தும் படத்தில்  பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் & ரைட்டர் உள்ளிட்டோர் தங்களது தொடர் நேர்காணல் பங்களிப்பின் வாயிலாக,   படத்தை நல்ல விதமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். 

அந்த வகையில்,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லியோவின் முதல் 10 நிமிட காட்சிகளை தயவு செய்து யாரும் விட்டு விடாதீர்கள். அதற்காக ஆயிரக்கணக்கானோர் சென்ற அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை உழைத்துள்ளோம். மிகப்பெரிய விருந்தாக உங்களுக்கு அமையும் என தெரிவித்திருந்தார். அதேபோல படத்தின் கடைசி 35 இலிருந்து 40 நிமிட காட்சிகள் ஏராளமான இன்ப அதிர்ச்சிகளை கொண்டிருப்பதாகவும் அதை கண்டு மகிழ்ந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல விக்ரம் படத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் இறுதியாக வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும்,  அதில்  சூர்யா அவர்கள் நடித்த  விதம்,  அவரது தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் லியோவிலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் போன்று மிரட்டலான கதாபாத்திரம் ஒன்றை இறுதியாக லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கலாம் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இது குறித்து சமூக வலைதளங்களில்  பதிவிட்டு வருகின்றார்.