நியூசிலாந்து அணிக்கு எதிராக ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அவர், இந்தப் போட்டியில் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் டெவன் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Abhishek Sharma departs for a golden duck! 🦆🤯
Jacob Duffy strikes in his very first over! 🇳🇿🔝
Both Indian openers are dismissed in just 7 deliveries! 🤐
🇮🇳 – 6/2 (1.1)#AbhishekSharma #INDvNZ #Raipur #Sportskeeda pic.twitter.com/nD4v0TNy38
— Sportskeeda (@Sportskeeda) January 23, 2026
“>
இது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அவர் எதிர்கொண்ட முதல் ‘கோல்டன் டக்’ (Golden Duck) ஆகும். இதுவரை 34 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 629 பந்தில் – 1,199 ரன்களைக் குவித்துள்ள போதிலும், நேற்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது அவரது சர்வதேசப் பயணத்தில் இரண்டாவது டக்-ஆகப் பதிவானது.
