உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், 3 வயதுக் குழந்தைகள் உட்பட 33 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் கைதான தம்பதிக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பாந்தா போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம், மனிதநேயமற்ற முறையில் சிறுவர்களின் வாழ்க்கையைச் சீரழித்த அந்தத் தம்பதியின் செயல் “அரிதினும் அரிதானது” எனக் குறிப்பிட்டு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகப் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்று வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் மீண்டும் எழுந்துள்ளன.
