கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த யது கிரிஷ் (38) என்ற நபர், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பெண்களிடம் பழகி, அவர்களைக் காதல் வலையில் வீழ்த்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களைத் தனிமையில் வரவழைத்து, ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனைப் பரப்பிவிடுவேன் என மிரட்டிப் பணம் பறிப்பதையும் இவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் அளித்த துணிச்சலான புகாரின் அடிப்படையில், போலீசார் யது கிரிஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.