முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சுமார் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து 2022-ல் விடுதலையான பேரறிவாளன், தற்போது தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

சிறையில் இருந்தபோதே சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர், இன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பார் கவுன்சிலில் முறையாக வழக்கறிஞராகத் தன்னை பதிவு செய்து கொண்டார்.

நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு விடுதலையான அவர், இப்போது அதே சட்டத்துறையில் வழக்கறிஞராகக் கால்பதித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமக்கு இத்தனை காலம் உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பேரறிவாளன், இனி வரும் காலங்களில் சட்ட ரீதியாகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.