டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, அவரது கணவர் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
டெல்லி காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வரும் பிரீத்தி சிங் என்பவர், மற்றொரு நபருடன் ஹோட்டலில் இருந்து வெளியே வருவதை அவரது கணவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், வீடியோ எடுத்த கணவரைத் தாக்க முயன்றதோடு, சிறிது நேரத்தில் அங்கிருந்து நைசாக நழுவி ஓட்டம் பிடித்தார்.
“இப்போது ஏன் முகத்தை மறைக்கிறாய்?” என்று தனது மனைவியைப் பார்த்து கணவர் ஆவேசமாகக் கேட்கும் காட்சிகள் நெஞ்சைப் பிழியும் வகையில் உள்ளது.
சட்டத்தை மதிக்க வேண்டிய காவலரே இப்படிச் சட்டத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளாரா என நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிரந்து காரசாரமான விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
