இந்தியக் கிராமப்புறங்களில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிய வழக்கம், தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் பூஜாரினு பிரதான் பகிர்ந்த வீடியோ மூலம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டாமலேயே, தினமும் தலை வாரும்போது இயல்பாகக் கொட்டும் முடிகளைச் சேகரித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பல மாதங்களாகச் சேகரிக்கும் இந்த உதிர்ந்த முடிகளை வாங்குவதற்கு என்றே வியாபாரிகள் சைக்கிளில் வருவார்கள் என்றும், கறுப்பு முடிக்கு அதிக விலையும் நரை முடிக்குக் குறைவான விலையும் கிடைப்பதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ பலருக்குத் தங்களது பாட்டி மற்றும் அம்மாக்கள் செய்த பழைய நினைவுகளை நினைவூட்டியுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் முடிகள் பெரும்பாலும் ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’ மற்றும் விக்குகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

“என் அம்மாவும் இப்படித்தான் முடி விற்று எனக்கு அழகான கம்மல் வாங்கித் தருவார்” எனப் பல நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pujarini Pradhan (@lifeofpujaa)

“>

குறைந்த வசதிகள் கொண்ட சூழலிலும், கிராமப்புறப் பெண்கள் சுயகௌரவத்துடன் வருமானம் ஈட்டப் புதிய வழிகளைக் கண்டறிவதை இந்தப் பதிவு பாராட்டும் விதமாக அமைந்துள்ளது.