மருத்துவமனை ஐசியூ (ICU) வார்டில் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு, பெண் மருத்துவர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்து அவரைப் பிழைக்க வைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகச் சில நிமிடங்கள் சிபிஆர் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் கைவிடும் சூழல் ஏற்படும். ஆனால், இந்த மருத்துவர் நம்பிக்கையைக் கைவிடாமல், தொடர்ந்து 30 நிமிடங்கள் போராடி அந்த நோயாளியின் இதயத் துடிப்பை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
BIG NEWS 🚨 Miracle in ICU !
Woman doctor performed CPR for nearly 30 minutes and successfully revived a patient in the ICU ❤️
Extremely Rare !
The intense moment has gone viral 🫡🙏🏻 pic.twitter.com/kk3q977nVH
— News Algebra (@NewsAlgebraIND) February 16, 2026
இந்தச் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அந்தப் பெண் மருத்துவர் மிகுந்த தீவிரத்துடன் போராடுவதும், நோயாளி உயிர் பிழைத்தவுடன் அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் உறைந்ததும் தெளிவாகத் தெரிகிறது. “நிஜமான ஹீரோக்கள் சீருடை அணிந்துதான் வருவார்கள்” என இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்த மருத்துவருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். மிக அரிதான இந்தச் சம்பவம், மருத்துவர்கள் மீதான மரியாதையை மேலும் அதிகப்படுத்தியுள்ளதோடு, நம்பிக்கையே வாழ்க்கை என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
