தொழில்நுட்ப வளர்ச்சியில் எப்போதும் முன்னணியில் இருக்கும் சீனா, தற்போது தங்கத்தை விற்பனை செய்வதற்காக ஒரு புதிய ‘தங்க ஏடிஎம்’ இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் தங்கள் பழைய தங்க நகைகளை இந்த இயந்திரத்தில் போட்டால், அதுவே தங்கத்தை உருக்கி, அதன் தரம் மற்றும் எடையைத் துல்லியமாகச் சரிபார்க்கிறது. இந்த முழு செயல்முறையும் முடிந்த 30 நிமிடங்களுக்குள், அதற்கான பணம் நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதன் மூலம் நகைக்கடைகளுக்குச் சென்று பேரம் பேச வேண்டிய அவசியமில்லாமல், மிகவும் வெளிப்படையான முறையில் மக்கள் தங்கத்தை விற்பனை செய்ய முடிகிறது.

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தக் குறைந்தபட்சம் 3 கிராம் தங்கம் இருக்க வேண்டும் மற்றும் அதன் தூய்மை 50 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எந்தவிதமான காகித ஆவணங்களோ அல்லது அடையாள அட்டைகளோ தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

“>

 

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த நூதன ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வரும் மாதங்களுக்கான முன்பதிவுகள் இப்போதே நிரம்பி வழிவது, இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள பெரும் வரவேற்பைக் காட்டுகிறது.