அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரை ஈரான் உளவுத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

கைதானவர்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் உள்நாட்டு முகவர்கள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் அமெரிக்காவின் FBI அமைப்பால் தேடப்பட்டு வந்த பிரபல சைபர் குற்றவாளி முகமது மெஹ்தி ஃபர்ஹாதி, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானில் பாதுகாப்புச் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், டென்மார்க் தனது தூதரகத்தை மூடியுள்ளதுடன், நெதர்லாந்து தனது தூதரகச் செயல்பாடுகளை அண்டை நாடான அஜர்பைஜானுக்கு மாற்றியுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் இது குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள வேளையில், ஐரோப்பிய நாடுகளின் இந்தத் தொடர் வெளியேற்றம் ஈரானில் பெரும் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.