திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக அருண் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் பேருந்து நள்ளிரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் அருண், பேருந்தில் பயணம் செய்த ராஜாராம்(40), அவரது மகன் விபுசன்(8) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.