திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் அல்போன்சா(60) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அல்போன்சாவின் வீட்டிற்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரஞ்சித், குட்டி, சகேயு ஆகியோர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அல்போன்சாவை அவர்கள் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அல்போன்சாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சகேயு, குட்டி, ரஞ்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.