
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெற அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த நிலையில் கல்லூரிகளில் தற்போது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் ஆயிரம் ரூபாய் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அப்போது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.