கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்காமலையே முரளி – மஞ்சுளா தம்பதி குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

இது குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.