ஈரோடு மாவட்டத்தில் உள்ள மண்டப வீதியில் மீன் வியாபாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நேற்று வழக்கம் போல சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் சத்தியமூர்த்தியை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் சுதாரித்துக்கொண்ட சத்தியமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனாலும் மர்ம நபர்கள் விடாமல் விரட்டி சென்று அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த சத்தியமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.