இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றது.எனவே ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் ஆதார் தகவல்களை இணையதளம் மூலம் கட்டணம் இன்றி புதுப்பிக்கலாம் என்று தனித்துவ அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டையில் பெயர் திருத்தம்,வயது மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் ஜூன் 14ஆம் தேதி வரை கட்டணம் இன்றி புதுப்பிக்கலாம்.அதே சமயம் ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான 50 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.