ஹரியானாவில் உள்ள ஒரு பிரபல கல்லூயில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் ஆகியோர் காதலித்துள்ளனர். படிப்பு முடிந்த பிறகு ஷிகர் பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இதேபோன்று நிதி சிங் குருகிராமில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் 30 லட்சம் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆகி 5 வருடங்களுக்குப் பிறகு தங்கள் வேலையை இருவரும் ராஜினாமா செய்து விட்டு சமோசா கடையை திறந்துள்ளனர்.

அதாவது ஒரு சிறுவன் சமோசாவுக்காக சாலையில் அழுது கொண்டிருந்ததை பார்த்த ஷிகர் கல்லூரி படிக்கும் போது தான் ஆரம்பிக்க வேண்டும் என சமோசா பிசினஸை தன் மனைவியின் சம்மதத்துடன் ஆரம்பித்துள்ளார். இருவரும் பெங்களூரில் சமோசா சிங் என்ற சிறிய சிற்றுண்டி கடையை திறந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் 40 கடைகளை திறந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல்முறையாக பெங்களூரில் பிசினஸ் தொடங்கிய தம்பதி தற்போது நாடு முழுவதும் 45 கடைகளை திறந்து வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 12 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. மேலும் இந்த தம்பதி தற்போது வருடத்திற்கு 45 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.