அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது மெட்டா நிறுவன ஊழியர் ஒருவர், 30 வயதிற்குள்ளாகவே தனது பணியில் இருந்து ஓய்வுபெறும் நோக்கில் ‘FIRE’ (Financial Independence, Retire Early) என்னும் பொருளாதார தன்னிறைவு மற்றும் விரைவு ஓய்வு வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருவது உலக அளவில் நுகர்வோர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டினாலும், கார், தொலைக்காட்சி (TV), சோஃபா போன்ற எந்தவொரு ஆடம்பரப் பொருட்களும் வாங்காமல் அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, தனது வருமானத்தின் பெரும்பகுதியை முதலீடு மற்றும் சேமிப்பில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மாதாந்திர அடிப்படைச் சம்பளம் ரூ.4 லட்சமாக இருந்தாலும், அவர் மேற்கொண்டுள்ள முறையான பங்குச்சந்தை  முதலீடுகள் மூலம் மட்டுமே தற்பொழுது மாதம் ரூ.20 லட்சம் வரை கூடுதலாக வருவாய் ஈட்டி வருகிறார். தற்கால இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த ‘FIRE’ லைப்ஸ்டைல் என்பது, இளமைப் பருவத்திலேயே கடுமையான சேமிப்பு மற்றும் முதலீடுகளைச் செய்து, மிக விரைவாகப் பொருளாதார சுதந்திரம் அடைந்து, 30 அல்லது 40 வயதிற்குள் விருப்ப ஓய்வு பெறுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த மெட்டா ஊழியரின் தீவிர சேமிப்பு மற்றும் முதலீட்டு உத்திகள் குறித்த விபரங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று டிரெண்டாகி வருகின்றன.