பிரான்ஸ் நாட்டில் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிப் போடும் வகையிலான ஒரு மிகக் கொடூரமான மனித மிருகத்தின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரான்சில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வரும் 51 வயதான கில்லூம் புக்கி (Guillaume) என்ற நபர், தனது 42 வயது மனைவியை கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

பணத்தாசை பிடித்த அந்த சைக்கோ கணவன், தனது மனைவியைக் கட்டாயப்படுத்திச் சர்வதேச அளவில் ஒரு விபச்சாரத் தொழிலில் தள்ளியதோடு, சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் படுக்கையைப் பகிரும்படி மிரட்டி அராஜகம் செய்துள்ளான். இந்த ஒட்டுமொத்தக் கேவலமான தொழிலையும் அந்த கணவனே முன்னின்று மேனேஜ் செய்து, வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது மனைவியை அவர்களிடம் அனுப்பிய அதிர்ச்சி உண்மைகள் தற்போது நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளன.

இதற்கிடையே அந்தப் பெண்ணுக்குப் பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது மூடிய அறைக்குள் ரகசிய விசாரணை வேண்டாம் என்றும், இந்த கொடூரனைப் பற்றி உலகம் அறிய வேண்டும் என்றும் தைரியமாகப் பொதுமக்களுக்கு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்தப் பெண் கூறுகையில், “மறுப்பு தெரிவித்தால் அடி உதை விழுவதோடு, தனது சிறுநீரைக் குடிக்க வைப்பது, பொதுக் கழிப்பறைகளைத் தனது நாக்கால் சுத்தம் செய்ய வைப்பது போன்ற கற்பனை செய்ய முடியாத சித்திரவதைகளை அவன் செய்தான்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 10 நாட்கள் இரவும் பகலுமாக இந்தத் தொழிலைச் செய்ய வைத்துவிட்டு, 10 நாட்களுக்கு ஒருமுறைதான் ஒரு நாள் முழுவதும் தூங்குவதற்கு அந்தப் பெண்ணை அவன் அனுமதித்துள்ளான். பலமுறை தப்பிக்க முயன்றும் கணவனின் கொலை மிரட்டலால் முடங்கிப்போன அந்தப் பெண், இறுதியில் துணிச்சலுடன் போலீசாரிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.

தெற்கு பிரான்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, அந்த சைக்கோ கணவனை முழுமையாகக் குற்றவாளி என அறிவித்துக் கடுமையான நீண்ட காலச் சிறைத் தண்டனையை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மிகப்பெரிய ஆத்திரத்தையும், அந்தப் பெண்ணின் தைரியத்திற்குப் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.