முதல்வர் ஸ்டாலினை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தோடு ஒப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு ‘வெற்றி.. வெற்றி..’ என முழக்கமிடும் புலிகேசி மன்னனைப் போலவே முதல்வர் செயல்படுகிறார்” என்று அவர் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர முதல்வர் உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை என்றும், மீண்டும் வெற்றி பெற்று 2.0 ஆட்சியை அமைப்போம் என்பது வெறும் பகற்கனவு என்றும் அவர் சாடியுள்ளார்.
உண்மையிலேயே மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதேனும் திட்டங்களைச் செய்திருந்தால், அதைச் சொல்லி தைரியமாக ஓட்டுக் கேட்கத் தயாரா? என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். களத்திற்கு வந்தால் திமுகவுக்கு 2.0 வெற்றி கிடைக்காது, வெறும் ‘முட்டை’ (0) தான் கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வரைப் புலிகேசியுடன் ஒப்பிட்டு இபிஎஸ் வெளியிட்ட இந்த அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பி வருகிறது.
